
கவுகாத்தி : வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண 1995- முதல், இரு மாநிலங்களுக்கு இடையே பல கட்ட பேச்சு நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.
சமீப காலமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது. சமீபத்தில் இரு மாநில எல்லையில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் ஆறு பேர்பலியாயினர். இதனால் அசாம் – மிசோரம் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது. அசாமை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், அசாம் வழியாக மிசோரமுக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதித்தன. இதற்கு மிசோரம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் அதிகாரிகள் கூறியதாவது: எல்லையில் பதற்றம் நீடிக்கிறது; எனினும் அசாமிலிருந்து மிசோரமுக்கு முடங்கியிருந்த போக்குவரத்து துவங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள்கூறினர்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2813289