
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி,சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
‘அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்’ என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.தமிழகத்தை 1967 முதல் இன்று வரை, இரு கழகங்களும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஒவ்வொரு தேர்தலிலும், இரு கழகங்களும் எண்ணற்ற வாக்குறுதிகள் அளிப்பதும், ஆட்சியில் அமர்ந்ததும் ஆண்டுதோறும் ‘பட்ஜெட்’ என்ற பெயரில், திட்டங்கள் குறித்து நீண்ட பட்டியல் வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளும், பட்ஜெட்டும் உண்மையாக இருந்திருந்தால், தமிழகம் இன்று உலக அளவில் மிக உயர்ந்த இடத்தில் இருந்திருக்கும்; அப்படி இருக்கிறதா?தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்கு வந்த பின் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் கழகங்களின் வழக்கம்.தற்போதைய நிதி அமைச்சர் தியாகராஜன், ‘தமிழக நிதி நிலையை சரி செய்ய மூன்றாண்டுகள் தேவை’ எனக் கூறியுள்ளார்.
நிலையை சரி செய்ய மூன்றாண்டுகள் தேவை’ எனக் கூறியுள்ளார்.

‘ஐந்து ஆண்டுகள்’ என்பதை தான், அவர் மூன்று ஆண்டுகள் என சொல்லியிருப்பாரோ?நிதி பற்றாக்குறை அதிகமாக இருக்கும்போது, அரசு பேருந்தில் மகளிருக்கு ஏன் இலவச பயணம்? 2,500 கோடி ரூபாயில் நான்கு பூங்காக்கள் அமைப்பது இப்போது அவசியமா?முதல்வர் ஸ்டாலின் அளித்த உறுதிமொழியை யாரும் நம்ப மாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும்!
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833342