
ராய்பூர்: சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும், மூத்த அமைச்சருக்கும் இடையே முதல்வர் பதவியை பிடிப்பதில் கடும் மோதல் நிலவுகிறது. இதையடுத்து காங்., – எம்.எல்.ஏ.,க்ககள் டில்லி வரும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. .
காங்., மூத்த தலைவர் பூபேஷ் பாகேல் சத்தீஸ்கர் முதல்வராக 2018 டிச.,ல் பதவியேற்றார். தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில் ஏற்கனவே உறுதி அளித்தபடி சுழற்சி முறையில் முதல்வர் பதவியை தனக்கு வழங்கும்படி சுகாதார துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் அவரை ஓரம்கட்டும் முயற்சியில் பூபேஷ் பாகேல் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
![]() |
இதனால் முதல்வருக்கும், சிங் தியோவுக்கும் இடையே உரசல் முற்றியது.
இதைத் தொடர்ந்து சிங் தியோ டில்லி சென்று காங்., தலைவர் சோனியாவை சந்தித்து சுழற்சி முறை முதல்வர் கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதையடுத்து பூபேஷ் பாகேல் டில்லி சென்று சோனியாவை சந்தித்து பேசி விட்டு, சத்தீஸ்கர் திரும்பினார். அவருக்கு ராய்ப்பூரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, ” காங்., அரசை பலவீனப்படுத்தவே சிலர் சுழற்சி முறை முதல்வர் கோரிக்கையை வைக்கின்றனர்,” என்றார்.
பூபேஷ் பாகேல் ராய்பூர் திரும்பி விட்ட போதிலும் சிங் தியோ இன்னும் டில்லியில் முகாமிட்டு உள்ளார். அதனால், ‘காங்., தலைமை மீண்டும் பூபேஷ் பாகேலை டில்லிக்கு அழைக்கும்’ என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சத்தீஸ்கர் காங்., – எம்.எல்.ஏ.,க்கள் டில்லி வரும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதால், சத்தீஸ்கரில் காங்., அரசு கவிழுமோ என்ற பரபப்பு நிலவுகிறது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831078