
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், சேலம் சூரமங்கலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களை வஞ்சிக்கும் ஸ்டாலின் அரசே! தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் & டீசல் விலை குறைப்பு, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை மக்களை ஏமாற்றாமல் உடனடியாக நிறைவேற்று! என பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில், இன்று காலை சேலம் சூரமங்கலம் பொலிசார் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது கொரோனா கட்டுப்பாட்டை மீறி அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தது உள்ளிட்ட மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சேலம் மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினர் ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Source: https://news.lankasri.com/article/tn-police-case-file-against-ex-cm-eps-1627539408