
புதுடில்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று (ஆக.,14) உரையாற்றுகிறார்.
ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00 மணிக்கு நாடு முழுதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

தொலைக்காட்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியின் மாநில மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படும். அகில இந்திய வானொலியில் இரவு, 9:30 மணிக்கு ஜனாதிபதியின் உரை மாநில மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படும்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2823130