
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று திடீரென தனித்தனியாக டெல்லி பயணம் மேற்கொண்டனர். இருவரும் இன்று காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பில் ஓ. பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டதற்கு பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என பிரதமரிடம் விலியுறுத்தினோம். மேலும் தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவித்தோம். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் இணைந்து இருக்கிறார்கள்” என்றார்.
செய்தியாளர்கள் சசிகலா செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, `நன்றி’ எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
Source: https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-26-07-2021-just-in-live-updates