
மதுரை-மதுரை புது நத்தம் ரோடு பறக்கும் பாலத்தில் நடந்த விபத்திற்கு, ‘ஒப்பந்ததாரர் அலட்சியமே காரணம்’ என, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்பின்றி நடக்கும் பணிகளால் அடிக்கடி விபத்து நடக்கும் நிலையில், மக்கள் உயிர் பயத்தில் பயணிக்கின்றனர்.மதுரை புது நத்தம் ரோடு ஐ.ஓ.சி., – செட்டிகுளம் வரை 670 கோடி ரூபாயில் 7.3 கி.மீ.,யில் பறக்கும் பாலம் கட்டும் பணி 2018ல் துவங்கியது. செட்டிகுளம் – நத்தம் 33.4 கி.மீ., நான்கு வழிச்சாலையும் அமைகிறது. மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை, ‘ஜெ.எம்.சி., புராஜக்ட்ஸ் இந்தியா’ நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இரண்டு சர்வீஸ் பாலங்கள்பாலத்தில் மேல் தளம் அமைக்க, 200க்கும் மேற்பட்ட மெகா கான்கிரீட் பில்லர்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பில்லர்களுக்கும் இடையில், 1,000 கிலோ கொண்ட கான்கிரீட் செக்மென்ட் பொருத்தும் பணியும், கீழே இறங்க, மேலே ஏற நாகனாகுளம், திருப்பாலையில் தலா 800 அடி உயர்மட்ட சர்வீஸ் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.இதில், 800 அடி பாலத்தில் 114 அடிக்கு ஒரு கான்கிரீட் பில்லர் என ஏழு துாண்கள் கட்டப்பட்டுள்ளன.
நாகனாகுளத்தில் ஒரு பகுதியில், 4 – 5 பில்லர்களில் பொருத்திய ‘கான்கிரீட் செக்மென்ட்’டை சரி செய்யும் பணி நேற்று முன்தினம் மாலை நடந்தது.தொழிலாளி பலி’ஹைட்ராலிக் ஜாக்கி’ மூலம் பொருத்தப்பட்ட செக்மென்ட்டின் 4ம் பில்லரில், இரண்டு தொழிலாளர்கள் நின்று பணி செய்தனர். அப்போது, ஜாக்கியில் இணைக்கும் பிரஷர் குழாய் அறுந்து விழுந்தது. அடுத்த நொடியே, பலத்த சத்தத்துடன் கான்கிரீட் செக்மென்ட்டும் விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த தொழிலாளி சுராஜ் குமார் தப்பினார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங், 26 பலியானார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833268