
மனித இனத்திற்கு கொரோனா தொற்று பெரும் சவாலாக உள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரிமனித இனத்திற்கு கொரோனா தொற்று பெரும் சவாலாக உள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
பயிற்சி முகாம்
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில், புதுவையில் ஒரு தனியார் ஓட்டலில் நேற்று பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. பயிற்சி முகாமை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-புதுச்சேரி மிகச்சிறிய மாநிலம். சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. மாணவர்களின் கல்விக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.அரிமா சங்கத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இந்த சங்கம் சேவை மனப்பான்மையுடன் பார்வையற்றோர், ஆதரவற்றோருக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. வசதி படைத்தவர்கள் அனைவரும் உதவுவது இல்லை. ஒவ்வொருவரிடமும் அன்பும், மனிதநேயமும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை வரும்.
பெரும் சவால்நான், விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது பொள்ளாச்சியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினேன். அந்த மாளிகையில் பெருந்தலைவர் காமராஜர் தங்கி இருந்தார் என அதிகாரிகள் கூறினார்கள். அது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
பெருந்தலைவர் காமராஜர் உருவம் பதித்த நாணயம் வெளியிட வேண்டும் என முதன் முதலில் மத்திய அரசுக்கு புதுவை அரசு தான் கோரிக்கை விடுத்தது. அந்த விழாவிலும் நான் கலந்துகொண்டேன். அதில், இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
மனித இனத்திற்கு கொரோனா தொற்று பெரும் சவாலாக உள்ளது. நானும் தொற்றால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து மீண்டு 3 மாதங்கள் மேலாகியும் என்னால் முன்பு போல் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. எனவே அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.