
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்பது திமிர்தனமான வார்த்தை. அணை கட்டினால் தமிழர்கள் ஒருங்கிணைந்து பேரியக்கமாக சென்று இடிப்போம்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதல்வர் முயற்சித்தால் பெரும் தமிழர் படை சென்று அதை தடுப்போம் எனவும் மேகதாது விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல் நாடகத்தையும், ஏமாற்று வேலையையும் காட்டுவதாக திரைப்பட இயக்குனர் கெளதமன் தெரிவித்தார்.
கரூர் வெண்ண மலையிலுள்ள ஐயப்பன் ஆலயத்தில் தொடர்ந்து 3 நாட்களாக சத்யபாமா அடிகளார், மூங்கில் அடிகளார் சேர்ந்து 100 பேருக்கு தமிழில் ஆகம பூசாரி பயிற்சி இலவச வகுப்புக்களை நடத்தி வருகின்றனர். 50 நபர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்று சான்றிதழை பெற்று உள்ளனர். இந்த பயிற்சியில் பெண்களும் தமிழ் ஆகம பூசாரி பயிற்சி பெற்றனர்.
பின்பு செய்தியாளர்கள் சந்தித்த, இயக்குனர் கௌதமன், 2,000 – 3000 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு இறைத் தமிழ் அழிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் நடைபெற்று வந்த தமிழ் வழி பூஜைகள் இன்றளவும் மறைக்கப்பட்டு வருகிறது.
2006-ல் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் 207 பேர் இதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடியாக முதல்வர் பணி வழங்க வேண்டும். மீண்டும் தமிழில் ஆலயங்களில் பூஜை நடத்த இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி தமிழர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
கர்நாடகாவில் பொம்மை முதல்வராக எடியூரப்பா இருந்தார். தற்போது, பொம்மை என்ற பெயரிலேயே முதல்வராக உள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்பது திமிர்தனமான வார்த்தை. அணை கட்டினால் தமிழர்கள் ஒருங்கிணைந்து பேரியக்கமாக சென்று இடிப்போம். மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே கர்நாடகா 4 அணைகளை கட்டியுள்ள நிலையில், நீதிமன்றம் கூறும் எந்த உத்தரவையும் மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அணை கட்ட ஒரு செங்கல் கூட வைக்க விடமாட்டோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது நாடகம், ஏமாற்று வேலை என்று தமிழ் திரைப்பட இயக்குனர் கெளதமன் குற்றம்சாட்டினார்.
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/karur-district-bjp-annamalai-move-on-megedattu-issue-is-bogus-says-director-gowthaman-aru-520369.html