
கோவை: மேகதாது விவகாரத்தில் பா.ஜ., இரட்டை வேடம்தான் போடுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.
கோவையில் ம.நீ.ம கட்சி தலைவர் கமல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவை தெற்கு மக்களுக்கு நன்றி. அவர்கள், நேர்மையாக வாக்களித்தார்கள். அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் செலுத்த வந்திருக்கிறோம். கோவையில் பகிரங்கமாக காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிய எங்களை வெற்றியின் மிக மிக அருகில் கொண்டு சென்ற கோவை மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்.
கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க போக முடியாதது ஆளும்கட்சி நெருக்கடியல்ல. இது மக்களுக்கான நெருக்கடி. கொரோனா விவகாரத்தில் கட்சி பேதம் பார்த்து அரசு நெருக்கடி கொடுக்கவில்லை. மக்கள் நலன் பார்த்து கொடுத்திருக்கிறது. கொரொனா தொற்றால் எங்கள் கட்சி தொண்டர்களையும் இழந்திருக்கிறோம். கொரோனா விவகாரத்தில் திமுக அரசு இயன்றதை செய்கின்றது. அது போதாது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இன்னும் அதிகமாக செய்யமுடியும் என்பதை அரசுக்கு நினைவுபடுத்துவோம்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2815678