
புதுடில்லி: டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறிய, காங்கிரஸ் எம்.பி., ராகுல் அது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
போக்சோ சட்டப்படி பாலியல் பலாத்காரத்திற்கு உண்டான சிறுவர்கள் அல்லது அவரது உறவினர்களின் புகைப்படங்களை மீடியாக்கள் அல்லது சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. இதனால், ராகுலின் டுவிட்டர் பதிவிற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த சர்ச்சைக்கு உள்ளான பதிவை ட்விட்டர் தற்பொழுது தாமாக நீக்கியது.

இதனிடையே வழக்கறிஞர் ஒருவர் இது குறித்து ராகுலுக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818315