
நாசிக்,
மராட்டியத்தின் நாசிக் நகரில் காய்கறி மொத்த சந்தையில் தக்காளி விலை நேற்று ரூ.2 முதல் ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், பருவமழை காலத்தில் அவற்றை பாதுகாக்கவும் முடியாத சூழல் காணப்படுகிறது.
இதனால், தக்காளியை பயிர் செய்த விவசாயிகள் அவற்றை கூடைகளுடன் சாலையில் கொட்டினர். வண்டி வாடகை, ஆள் கூலி உள்ளிட்டவற்றுக்கான செலவுக்கு கூட ஈடாக விற்பனை விலை இல்லாதது விவசாயிகளிடையே வருத்தம் ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.