
புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், வயல்களை மண்ணாக்க அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் டில்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், இந்த வேளாண் சட்டங்களால் பிரதமர் மோடியின் நண்பர்களான சில தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவதாகவும் காங்., எம்பி., ராகுல் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களை மணலாக மாறவிடக்கூடாது, தங்களின் நண்பர்களுக்காக இந்த வயல்களை வழங்க அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831755