
புதுடில்லி: டில்லியில் வரும் 2048ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வேண்டும் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்ற ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கோவிட் காரணமாக இந்த ஆண்டு 2021ல் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. 2024ம் ஆண்டு பிரான்ஸ் த;லைநகர் பாரிஸில் நடக்க உள்ளது.

இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, ‛ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற நம் வீரர்களுக்கு என் வாழ்த்துகள். 2048ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை டில்லியில் நடத்த வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாககப்படும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2824302