
அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோவில் கட்டுமானப்பணிகளை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
ராமர் கோவில் கட்டுமானத்துக்காக அதிக விலையில் நிலம் வாங்கியதாக இந்த அறக்கட்டளை மீது ஏற்கனவே புகார் வந்தது. எனினும் இது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்கள் விளக்கம் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த நிலையில் அறக்கட்டளை மீது தற்போது மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் ராமர் கோவிலுக்காக நசுல் நிலம் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக மகந்த் தரம்தாஸ் என்பவர் அயோத்தி போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரில், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அனில் மிஸ்ராவை முக்கிய குற்றவாளியாகவும், அத்துடன் மேலும் சிலரின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த நில மோசடி புகார் அயோத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\