திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பதிவு: ஜூலை 14, 2021 09:50 AM
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 128 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 8 ஆயிரத்து 854 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அன்றைய தினம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 82 லட்சம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.