
வெள்ளி முதல் வியாழன் வரை ( 20.8.2021- 26.8.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்:
சூரியன், புதன். குரு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். துர்கையைத் துதித்தால் கஷ்டம் நீங்கும்.
அசுவினி: கடந்த வார சிரமங்களிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். எந்தச் செயலையும் நிதானமாகச் செய்து வெற்றி இலக்கை அடைவீர்கள்.
பரணி: வெற்றி கிடைக்கும். நிதானமாக அணுகிக் குடும்பத்திலுள்ள குழப்பங்களை தீர்ப்பீர்கள். செலவுகள் அடியோடு குறையும். தந்தைவழி உறவுகளால் இருந்த வீண் தொல்லை மறையும்.
கார்த்திகை1: தீயவர்கள் தொடர்பால் ஏற்பட்ட சஞ்சலம் நீங்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளைப் புகுத்தி லாபத்தை அதிகரிக்க முயல்வீர்கள். சுப விஷயத்தில் தடைகள் விலகும்.
ரிஷபம் :
புதன், சூரியன், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். அம்மன் வழிபட்டால் மகிழ்ச்சி கூடும். கார்த்திகை 2,3,4: இடைவிடாமல் உழைப்பீர்கள். சாப்பிடக் கூட நேரம் இருக்காது. அரசு வகையில் சலுகை காண்பீ்ர்கள். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்தியான வாரம் இது.
ரோகிணி: கடன் வாங்க நேரலாம். திருமண வாய்ப்பு தடை, தாமதத்திற்குப் பிறகு இப்போது கூடி வரும். நல்ல நிகழ்வுகள் வீட்டிலும், அலுவலகத்திலும் நடைபெறும்.
மிருகசீரிடம்1,2 : பல நாட்களாகக் காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்களுக்குக் கல்வியில் ஈடுபாடு கூடும். கணவன், மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.
மிதுனம்:
ராகு, கேது, குரு சாதக நிலையில் உள்ளனர். விஷ்ணு வழிபாடு நலம் தரும்.
மிருகசீரிடம் 3,4: பெரியோர்களின் ஆசி கிடைக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். அக்கம் பக்கத்தினரால் பிரச்னை ஏற்பட்டு விலகும். தொழிலில் லாபம் கூடும்.திருவாதிரை: நீங்கள் அமைதி காத்தால் குடும்பத்தில் சந்தோஷம் குறையாது. நண்பர்களைப் பற்றி மற்றவர்களிடம் வம்பு பேச வேண்டாம். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.
புனர்பூசம் 1,2,3: எந்தவித ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம். கடந்த கால அனுபவம் ஓரளவு கைகொடுக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உடல்நலனில் அக்கறை தேவை.
சந்திராஷ்டமம்: 20.8.2021 அதிகாலை 4:45 மணி – 22.8.2021 காலை 9:11 மணி
கடகம் :
சுக்கிரன், ராகு நன்மைகளை வாரி வழங்குவர். ராமர் வழிபாடு நிம்மதி அளிக்கும்.
புனர்பூசம் 4: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்ப்பு ஓரளவே நிறைவேறும்.
பூசம்: சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பணியாளர்களும், தொழில் செய்வோரும் தடைகளை முறியடித்து முன்னேறுவர்.
ஆயில்யம்: அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. ரிஸ்க் தரும் விஷயங்களை யோசிக்க வேண்டாம்.சந்திராஷ்டமம்: 22.8.2021 காலை 9:12 மணி – 24.8.2021 மாலை 3:48 மணி
சிம்மம் :
குரு, புதன், சூரியன் அனுகூலம் தருவர். திருமகள் வழிபாடு சிரமம் தீர்க்கும்.
மகம்: பணவசதி கூடும். தெய்வசிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம்.
பூரம்: எதிர்பாராத பணவரவு கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். தடைபட்ட நிதிஉதவி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலநலன் குறித்து கவலை உண்டாகலாம்.
உத்திரம்1: பணியாளர்களின் வேலைப்பளு, வீண்அலைச்சல் குறையும். சக ஊழியர்களிடம் இணக்கமான போக்கு காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த வருத்தம் தீரும்.
சந்திராஷ்டமம்: 24.8.2021 மாலை 3:49 மணி – 26.8.2021 இரவு 12:52 மணி

கன்னி :
சந்திரன், கேது அதிர்ஷ்டமான பலன்கள் தருவர். குருவாயூரப்பன் வழிபாடு நல்லது.
உத்திரம் 2,3,4: தொழில், வியாபாரம் செய்வோருக்குப் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பார்கள்.
அஸ்தம்: இந்த வாரம் எதிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யத்தால் எடுத்த விஷயங்கள் சாதகமாக முடியும். நல்லவர்களின் உதவி கிடைக்கும்.
சித்திரை1,2: தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல். பணிச்சுமை குறையும்.
துலாம்:
குரு, புதன், சூரியன் அனுகூல அமர்வில் உள்ளனர். மகாலட்சுமி வழிபாடு நலம் தரும்.
சித்திரை 3,4: எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக நடக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பூசல் ஏற்பட்டு சரியாகும். பெண்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும்.
சுவாதி: எடுத்த முயற்சியை நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணவரவு திருப்தியளிக்கும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும்.
விசாகம் 1,2,3: குடும்பச் செலவு கூடும். குடும்பம் பற்றிய கவலை தீரும். உறவினர்கள், நண்பர்களிடம் நிதானமாகப் பேசுவது நன்மை தரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்
விருச்சிகம் :
சூரியன், சந்திரன், புதன் நற்பலன் தருவர். முருகன் வழிபாடு சிரமம் போக்கும்.
விசாகம் 4: முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அவர்களால் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். மாணவர்களுக்கு இருந்த கவலை மறையும்.
அனுஷம்: விலை உயர்ந்த பொருள் வாங்குவதையோ, மற்றவர்களுக்கு கடன் தருவதையோ தவிர்த்திடுங்கள். பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உயர் பதவிகள் தேடி வரும்.
கேட்டை: வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி உழைப்பீர்கள். குடும்பம் சிறப்பாக நடக்கும். மனதில் குதுாகலம் தலைகாட்டும். கடனில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள்.
தனுசு :
சந்திரன், ராகு, கேது நற்பலன் தருவர். பெருமாள் வழிபாடு வளம் சேர்க்கும்.
மூலம்: திட்டமிட்டு பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வாழ்வில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சியில் சாதகபலன் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும்.
பூராடம்: பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளியூரில் தங்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திராடம்1: பாதியில் நின்ற பணியை தொடர்வீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.
மகரம்:
குரு, புதன், கேது, சந்திரனால் அதிர்ஷ்டம் சேரும். சனீஸ்வரர் வழிபாடு சிரமம் போக்கும்.
உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடந்த சில வாரங்களாக இருந்த மந்தநிலை மாறும். நண்பர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும்.
திருவோணம்: சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பர். உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். வீடு, வாகன வகையில் செலவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.
கும்பம் :
புதன், சூரியன், குருவால் நன்மை கிடைக்கும். சூரியன் வழிபாடு சுகம் தரும்.
அவிட்டம் 3,4: பணவரவு திருப்தி தரும். சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். கடமைகளில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள்.
சதயம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். மகன்/ மகளுக்காக நீங்கள் செய்த முயற்சிகள் வீண் போகாது.
மீனம் :
புதன், ராகு, சுக்கிரன் தாராள நற்பலன் வழங்குவர். தட்சிணாமூர்த்தி வழிபாடு சிரமம் நீக்கும்
பூரட்டாதி 4: திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். நெருங்கிய உறவினர், நண்பர்களின் ஒத்துழைப்பால் சிரமங்களும் கவலைகளும் நீங்கும்.
உத்திரட்டாதி: வீண்செலவு குறையும். திறமை வெளிப்படும். முயற்சிகள் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறுவம்.
ரேவதி: உழைப்பும், பொழுதுபோக்கும் சம அளவில் இருக்கும். களைப்பின்றி உற்சாகமாக பணியில் ஈடுபடுவீர்கள். உடல்நலக்குறைவு சரியாகும். பிறரை மகிழ்ச்சி கண்டு சந்தோஷம் கொள்வீர்கள்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2827095