
மானிடோபாவில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மின்னல் தாக்கி மொத்தமாக எரிந்து சேதமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதறவைக்கும் இச்சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ரிச்சருக்கு மேற்கே ஆறு கிலோமீற்றர் தொலைவில் நடந்துள்ளது.
சம்பவத்தின் போது தம்பதி ஒன்று பிரதானசாலை 1ல் தங்கள் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர். திடீரென்று மின்னல் தாக்கியதில் வாகனத்தின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இதுபோன்ற ஒரு சம்பவத்தை இப்பகுதியில் இதுவரை கண்டதில்லை என்றே தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கிய வேளை அப்பகுதியில் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது என தீயணைப்பு வீரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் பயணப்பட்ட தம்பதிக்கு சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது. மின்னல் தாக்கியதில் அந்த வாகனம் மொத்தமாக எரிந்து சேதமடைந்துள்ளது.
Source: https://canadamirror.com/article/driving-down-manitoba-highway-1628593518