
காபூல்: ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அரசு அமைப்பது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அடுத்து ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கர்சாயுடன், முந்தைய அரசின் சமாதான தூதராக செயல்பட்ட அப்துல்லா அப்துல்லாவும், தலிபான்கள் சார்பில், அந்த அமைப்பின் மூத்த கமாண்டரும் ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான அனாஸ் ஹக்கானி கலந்து கொண்டார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2825849