
இந்தியாவில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அங்கிருந்த சிறைச்சாலைகளில் இருந்து பல்வேறு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 100 பேரும் அடங்குவர் அந்த 100 பேரும் மீண்டும் தங்கள் தீவிரவாத குழுத் தலைமையகத்தில் இணைந்துள்ளதால் கூடுதல் பலத்துடன் தாக்குதல் நடத்த சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மூத்த தலைவர்களும், தாலிபன்களின் முக்கியப் பிரமுகர்களும் ஏற்கெனவே பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு தலிபான்கள் துணையாக இருக்கும் என அந்த அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும்,இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
Source: https://ibctamilnadu.com/article/jaishree-mohammed-plan-attack-india-1630047784