
புதுடில்லி-”ஆன்டிகுவாவில் இருந்து, இந்திய அதிகாரிகள் என்னை கடத்திச் சென்ற சம்பவம், என் உடலில் மட்டுமின்றி, மனதிலும் நிரந்தர தழும்பாக உள்ளது,” என, வைர வியாபாரி மெஹுல் சோக்சி, 62, தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரிகள் மெஹுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியோர், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, வெளிநாடு தப்பினர்.மெஹுல் சோக்சி, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடா குடியுரிமை பெற்று, 2018ல் அங்குகுடியேறினார்.தனி விமானம்இவரை இந்தி யாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மே மாத இறுதியில்,மெஹுல் சோக்சி திடீரென மாயமானார். அருகே உள்ள தீவு நாடான டொமினிக்காவில், சட்ட விரோதமாக நுழைந்த குற்றத்திற்காக, போலீசார் அவரை கைது செய்தனர். உடல்நிலையை காரணம் காட்டி, சோக்சிக்கு ஜாமின் வழங்குமாறு, டொமினிக்கா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, டொமினிக்காவில் இருந்து, தனி விமானம் வாயிலாக புறப்பட்ட சோக்சி ஆன்டிகுவா வந்தடைந்தார்.அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘ஆடியோ’ ஒன்றை சோக்சி நேற்று வெளியிட்டார். தழும்புஅதில் கூறியுள்ளதாவது:என் வியாபாரம் அனைத்தையும் மூடி, என் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த நிலையில், இந்திய அதிகாரிகள் என்னை கடத்திச் செல்ல முயன்றனர். இந்த சம்பவம், என் உடலில் மட்டுமின்றி மனதிலும் நிரந்தர தழும்பாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2803858