
தமிழக நிகழ்வுகள்
நிலத்தகராறில் விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தை சேர்ந்தவர், பெரியசாமி, 67. இவரது தம்பி சடையன், 57. இவர்களுக்கு அதே ஊரில் நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் தம்பி சடையனுக்கு நாவலூர் கிராமத்தில், பெரியசாமி நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014ல், பூர்வீக சொத்தில் தனக்கு பங்கு உள்ளதாக கூறி தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக இருவர் இடையே தகராறு ஏற்பட்டது அதன்பின் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு 8:00 மணியளவில் கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றி விட்டு நடந்து வந்த பெரியசாமியை, கரும்புத் தோட்டத்தில் மறைந்திருந்த அவரது தம்பி சடையன் அரிவாளால் வெட்டியுள்ளார்.இதில், ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த பெரியசாமியை அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதிகாலை 2:00 மணியளவில் விவசாயி பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மல்லியகரை போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து அவரது தம்பி சடையனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் உட்பட 2 பேர் கொலை
திருநெல்வேலி,—திருநெல்வேலி, துாத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லுாரி மாணவர் உட்பட இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரை கிராமத்தில் கீழத்தெரு, மேலத்தெரு மக்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படும். இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவரான கீழத்தெரு அபினேஷ் 20, நேற்று முன்தினம் இரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கூடங்குளம் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடுகின்றனர்.துாத்துக்குடி கொலைதூத்துக்குடி தெர்மல் நகர் ரமேஷ் 20. சில தினங்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் குடிபோதையில் சிலர் நடனமாடினர். இதுபற்றி போலீசார் விசாரித்தனர். ரமேஷ்தான் புகார் கூறியிருக்கலாம் என அவரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது. முருகேசன் நகரில் நண்பர் வீட்டில் துாங்கிய ரமேைஷ கும்பல் வெட்டி கொன்றது. வடபாகம் போலீசார் தூத்துக்குடி அமுதா நகர் ராஜபாண்டி 21, மூன்றாவது மைல் முத்துப்பாண்டி 20 உள்பட 7 பேரை தேடுகின்றனர்.
10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் கள்ளக்காதலனுடன் தாய் கைது
வடமதுரை,-திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
மிரட்டிய தாயும் சிக்கினார்.வடமதுரை சத்யா நகரை சேர்ந்தவர் சிவகுமார் 35. இவரும், திண்டுக்கல்லை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் 45 வயது பெண்ணும் வேடசந்துாரில் தனியார் நுாற்பாலையில் பணி செய்கின்றனர். இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணின் இரண்டாவது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிய சிவகுமார் வடமதுரை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்தார்.இதுபற்றி மாணவி தாயிடம் கூறியபோது ‘நடந்ததை வெளியே சொல்லக்கூடாது’ என மிரட்டினார். மாணவி, உறவினர்களிடம் கூறவே வடமதுரை போலீசில் புகார் செய்யப்பட்டது. சிவகுமார், மாணவியின் தாய் ஆகியோரை ‘போக்சோ’வில் போலீசார் கைது செய்தனர்.
தேசிய நிகழ்வுகள்
ஜெர்மனியிலிருந்து போதைப்பொருள் வரவழைப்பு ; பெங்களூரில் என்.சி.பி., அதிகாரிகள் கண்டுபிடிyfyபெங்களூரு : அட்டைப்பெட்டியில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை ஒளித்து வைத்து ஜெர்மனியிலிருந்து தபால் மூலம் பார்சலில் வரவழைத்த பெண்ணை, என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர்.
குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை ‘பாய்லர்’ வெடித்து பலி 5 ஆக உயர்வு
பெங்களூரு : பெங்களூரு மாகடி சாலையின், கோபாலபுரா 5வது குறுக்கு சாலையில், தனியார் தொழிற்சாலையில், ஆகஸ்ட் 23ல் பாய்லர் வெடித்ததில் தொழிலாளர்கள் மனிஷ், 21, சவுரவ், 24, தனலட்சுமி, 52, தொழில் பங்குதாரர் சச்சின் மேஹ்தா, 35, உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், சாந்தி, 43, என்பவர் தீக்காயங்களுடன் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.
மர்ம நபர்கள் பெண்ணை கடத்தி கொலை
மைசூரு : மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகா மூகூறு கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 35 இவர், கடந்த புதன்கிழமை மாலையில், கிராமத்தின் வெளியே, கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.இரவாகியும் அவர் வீடு திரும்பாததால், வீட்டிலிருந்தோர் பல இடங்களில் தேடினர். அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. மறுநாள் வியாழக்கிழமை, ஹாயசஹள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில், கால்வாய் அருகில் பாலத்தின் அடியில் சாக்கு மூடை ஒன்று கிடந்ததை பார்த்த சிலர், அருகில் சென்று பார்த்த போது, அதனுள் பெண் பிணம் இருந்ததை பார்த்து அதிர்ந்தனர்.போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.
![]() |
காலாவதி விசாவில் தங்கியவரை சூடானுக்கு அனுப்பிய அதிகாரிகள்
சென்னை–தமிழகத்தில், காலாவதியான விசாவில் தங்கியிருந்த சூடான் நாட்டைச் சேர்ந்த நபரை, குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று சூடானுக்கு திருப்பி அனுப்பினர்.
சூடான் நாட்டைச் சேர்ந்தவர் முகமது ஹலுாம், 36. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார். விசா காலம் முடிந்தும் அவர் நாடு திரும்பவில்லை. தமிழகத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தங்கி, பின்னலாடை தொழிற்சாலைகளில் தினக் கூலியாக வேலை செய்து வந்துஉள்ளார். இதற்கிடையே, சூடானில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த முகமது ஹலுாம், திரும்பி செல்லாததையும், அவரது விசா நீட்டிப்பு செய்யப்படாததையும் கண்டுபிடித்த குடியுரிமை அதிகாரிகள், அவரைத் தேடத் துவங்கினர். தமிழக போலீசிற்கும் தகவல் அளித்து, முகமது ஹலுாமை தேடினர். திருப்பூர் அருகே முகமது ஹலுாமை கடந்த மாதம் போலீசார் கண்டுபிடித்தனர்.
தமிழக நிகழ்வுகள்
கோவில் பணம் கையாடல்; பெண் அலுவலர் மீது குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், முதல் நிலை செயல் அலுவலராக சிந்துமதி, 48, என்பவர் பணியாற்றினார். இவர், கோவில் பணத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, அறநிலையத் துறை மண்டல தணிக்கை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது. இது குறித்த அறிக்கை, அறநிலையத் துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
8 பேருக்கு ‘குண்டாஸ்’
சென்னை : பெரியமேடைச் சேர்ந்த பிரேம்குமார், 26, புளியந்தோப்பைச் சேர்ந்த ஜிலானி, 24, ஆகியோர் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த ஹரிகுமார், 44, மூத்த குடிமக்களிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வாளால் கேக் வெட்டிய இருவர் கைது
தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா பகுதியில் சிலர் பெரிய வாளால் பிறந்த நாள் கேக் வெட்டும் வீடியோ பரவியது. இது தொடர்பாக உதையாச்சி குரூப் வி.ஏ.ஓ. சந்திரசேகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணை செய்ததில் தேனம்மை ஊரணி பகுதியை சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக்22, நண்பர் அய்யப்பன் 35, மற்றும் 5 பேருடன் இணைந்து வாளால் கேக் வெட்டியது தெரியவந்தது. முகமது அபுபக்கர் சித்திக், அய்யப்பன் இருவரையும் எஸ்.ஐ., ஜெயமூர்த்தி கைது செய்தார். மற்ற ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடியில் மூன்று பெண்களிடம் கத்தியை காட்டி கொள்ளை
காரைக்குடி : காரைக்குடி வள்ளுவர்நகர் 10வது வீதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் மனைவி மீனாள் 50. மீனாவின் வீட்டிற்கு கர்ப்பிணியான மகள் ஐஸ்வர்யா சிகிச்சைக்காக வந்திருந்தார். ஐஸ்வர்யாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆக.15ல் செவிலியர் சாந்தி 30 என்பவர் வந்திருந்தார். அப்போது, முகக்கவசம் அணிந்த 4 பேர் வீட்டுக்குள்புகுந்து, கத்தியை காட்டி மூன்று பெண்களிடம் இருந்த ஆறரை பவுன் நகைகள், அலைபேசிகள், ரூ.15 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.காரைக்குடி போலீசார் விசாரித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்டது முத்துப்பட்டினத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ராமு 21, திருப்புத்துார் நாகப்பன்பட்டியை சேர்ந்த பழனியப்பன் மகன் சிவா 26 என்பது தெரியவந்தது.மற்ற இருவர்களை தேடி வரும் நிலையில், ராமு மற்றும் சிவாவை காரைக்குடி போலீசார் கைது செய்தனர்.
பணிக்கு சேர்ந்த நாளே திருட்டு
பரமக்குடி :பரமக்குடி மரைக்காயர் பட்டினத்தில் இரும்பு கடை நடத்தி வருபவர் ஜெயபாண்டியன், 52. இங்கு ஆக., 25 ம் தேதி பாலன் நகரைச் சேர்ந்த கரண், 20, லோடுமேனாக வேலைக்கு வந்துள்ளார்.அன்றைய தினம் இரவு 9:00 மணிக்கு கடையை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இக்காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி., யில் பதிவானது.கரணை, எஸ்.ஐ., குமரேசன் கைது செய்தார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2832764