
புதுடில்லி :அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு பிரச்னைகளை எதிர்கொள்வது பற்றி டில்லியில் சட்ட நிபுணர்களுடன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.
மேகதாதுவில் காவிரி ஆற்றில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் டில்லி வந்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு பிரச்னை பற்றி சட்ட நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
![]() |
கர்நாடக பவனில் நடந்த இந்த ஆலோசனைக்கு பின் முதல்வர் பொம்மை கூறியதாவது:அண்டை மாநிலங்களுடான நதி நீர் பிரச்னைகளை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தேன். மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் நிலையை உச்ச நீதிமன்றம்
ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.தமிழத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நீர் திட்டங்கள், சட்ட விரோதமானவை. இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் மனு தாக்கல் செய்யப்படும். மத்திய அரசிடமும் இந்த விவகாரம் பற்றி பேசுவோம்.
இவ்வாறு அவர்கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831240