
திருவனந்தபுரம்-கேரளாவில் கல்லுாரி மற்றும் பல்கலைகளில், ‘ஆன்லைன்’ வகுப்புகளை துவக்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

பள்ளிகளில், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், உயர் கல்வி நிறுவனங்களிலும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்த, கேரள அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் இதற்காக, ‘லெட்ஸ் கோ டிஜிட்டல்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2814111