ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்னேற்றம் கடந்த சில ஆண்டுகளில் எண்ணில் அடங்காத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது.
தற்பொழுது இருக்கும் முன்னேற்றத்தை அப்படியே இன்னும் இரட்டிப்பாக்க அம்பானி திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில், இந்தியாவின் தற்போதைய முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ், பிரபல ‘ஜஸ்ட் டயல்’ (Just Dial) நிறுவனத்தை விலைக்கு வாங்கப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் சமீபத்தில் வெளியான செய்தி அறிக்கையின் படி, ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் வசம் உள்ள பங்குகளை 900 மில்லியன் டாலருக்கு வாங்க ஜியோ நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
தெரியாதவர்களுக்கு, ஜஸ்ட் டயல் லிமிடெட் என்பது ஜஸ்ட்டியல் என ஸ்டைலிஸ் போக்கில் அழைக்கப்படுகிறது. ஜஸ்ட் டயல் நிறுவனம் என்பது தொலைப்பேசி, வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகள் வழியாக இந்தியாவில் உள்ள பல்வேறு சேவைகளுக்கான உள்ளூர் தேடலை வழங்கும் ஒரு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
25 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் நிறுவனத்தை வாங்க திட்டம் Just Dial நிறுவனம் இந்தியாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் உள்ளூரில் உள்ள நிறுவனங்களின் விவரங்களைச் சேகரித்து, அந்த நிறுவனம் அல்லது அதன் தொழில் தொடர்பாக மக்கள் தேடும் தகவல்களை அவர்களுக்கு சில நொடியில் தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் தொலைப்பேசி, மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆகிய மூன்று வழிகளிலும் செயல்பட்டு வருகிறது. SBI வெளியிட்ட எச்சரிக்கை டிப்ஸ்.. அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி.. பாதுகாப்பாக இருக்க இதை செய்யுங்கள்.. ஜஸ்ட் டயல் ‘8888888888’ இனி ரிலையன்ஸ் டயலாகா மாறுமா? ‘8888888888’ என்ற ஜஸ்ட் டயல் எண்ணைத் தொடர்பு கொண்டு மக்கள் அவர்களுக்குத் தேவையான தகவல்களை நிறுவனத்திடம் ஒரே ஒரு போன் அழைப்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஆண்டின் அறிவிப்புப் படி, ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்கு சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா நிறுவனம் கூட ஜஸ்ட் டயல் நிறுவனத்தைக் கையகப்படுத்தத் திட்டமிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியா அல்லது வெற்றியா? ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் , கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரிலையன்ஸ் குழுமம் ஜஸ்ட் டயல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தது போல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும் வரும் ஜூலை 16 ஆம் தேதி நடைபெறும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறுவனத்தை விற்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://canadamirror.com/article/mukesh-has-plan-to-buy-a-new-big-company-1626634051