
சென்னை :
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல் இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2819926