
மும்பை விமான நிலையத்தில் அதானியின் பெயர்ப் பலகையை சிவசேனாவினர் அப்புறப்படுத்தினர்.
The Mumbai airport was maintained by GVK. However, Adani bought a majority stake in Mumbai Airport from the company. GVK initially refused to sell its stake in Mumbai Airport. Adani has since sold shares to the company over the past few months due to compulsion. Earlier last month, Adani took control of the Mumbai airport. Adani maintains eight airports across the country. Adani, which has taken control of the Mumbai airport, is said to have removed the ‘Chhatrapati Shivaji Airport’ nameplate on the Western Express Highway near the airport and put up its own nameplate.
இதனால் ஆத்திரமடைந்த சிவசேனாவினர் அந்தப் பெயர்ப் பலகையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதோடு ஏற்கெனவே இருந்த, `சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயர்ப் பலகையை வைத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் லிமிடெட், “சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் என்று இருந்த பெயர்ப் பலகையை மாற்றவில்லை. இதற்கு முன்பு விமான நிலையத்தை நிர்வகித்த நிறுவனத்தின் பெயர்ப் பலகை இருந்தது. அதை அகற்றிவிட்டு அதானி நிறுவனத்தின் பெயர்ப் பலகையை வைத்தோம்” என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மும்பை சர்வதேச விமான நிலையத்தின் தலைமையகத்தை அதானி நிறுவனம் குஜராத்துக்கு மாற்றப்போவதாகச் செய்தி வெளியானது. அதை அதானி நிறுவனம் மறுத்துள்ளபோதிலும் இந்தச் செய்தியால் சிவசேனாவினர் கொதித்துபோயிருக்கின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் அதானி நிறுவனத்தின் பெயர்ப் பலகை விமான நிலையத்துக்கு அருகில் வைக்கப்பட்டதால் மேலும் கொதிப்படைந்துள்ளனர். இதற்கிடையே நவிமும்பையில் புதிய விமான நிலையம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source: https://www.vikatan.com/news/india/shiv-sena-removes-adanis-name-plate-at-mumbai-airport