
நிர்ணய விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 2500 – 100000 ரூபாய் வரையில் அபராதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/if-the-high-prices-of-the-goods-fined-100-000-1628561290