கண்டியில் இளைஞன் ஒருவரை குடும்பமாக சேர்ந்த தாக்கி கொலை செய்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மினிபோ, ஹசலக, அத்தேஎல பகுதியில் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் இணைந்து கொடூரமாக தாக்கியதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
28 வயதான சுனில் நிஷங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இறந்தவரின் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/young-man-killed-in-attack-1626076567