
கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கு இன்னும் 15000 கோவிட் – 19 தடுப்பூசிகள் தேவை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் – 19 தடுப்பூசி 50000 பெறப்பட்ட போதிலும் இதுவரையில் 43196 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்றும், நாளையும் ஏனைய தடுப்பூசிகள் முற்று முழுதாக வழங்கப்படும். அத்துடன் 15000 தடுப்பூசிகள் மேலதிகமாக தேவைப்படுகிறது.
அத்தோடு நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 68 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/in-kilinochchi-15-000-needles-needed-complete-1628142080