
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டகலை, ரொசிட்டா பண்ணைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான வான் ஒன்றில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து குறித்த மோட்டார்சைக்கிள் மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பில் பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து தெரிவித்தனர்.


Source: https://tamilwin.com/article/accident-at-kotagala-1626067577