
சுவிட்சர்லாந்தில் இளம் பெண்ணை தலிபான் என அவமதித்ததாக கூறி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் கடந்த 2020 ஜூன் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கு சூரிச் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை ஒரு தீவிரவாதியாகவே அடையாளப்படுத்த முயன்றதாக கூறி நீதிமன்றம், 36 வயதான அந்த நபருக்கு 300 பிராங்குகள் அபராதம் விதித்துள்ளது.
மேலும், 30 பிராங்குகள் என 30 நாட்களுக்கு நிபந்தனை அபராதமும் விதித்துள்ளது. மட்டுமின்றி நீதிமன்ற விவகாரங்களுக்கான கட்டணமாக 2,500 பிராங்குகள் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட 18 வயதேயான இளம் பெண்ணிற்கு இழப்பீடாக 1,400 பிராங்குகள் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2020 ஜூன் மாதம் சூரிச் பிரதான நிலையத்தில் குறித்த இளம் பெண் தலையை மூடியபடி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே அவரை தலிபான் என கூறி அந்த நபர் அவமதித்துள்ளார். தொடர்ந்து அவர் பொலிசாரை நாடியதுடன் இந்த விவகாரத்தில் வழக்கும் பதியப்பட்டது.
Source: https://news.lankasri.com/article/woman-wearing-a-headscarf-1627900816