
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வரும் இரண்டு டோஸ் தடுப்பூசி பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 2ம் திகதி காலை 4 மணி முதல் இந்த விதி அமுலுக்கு வரும் என ஷாப்ஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் பிரித்தானியாவில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை மீண்டும் ஒன்றிணைக்க நாங்கள் உதவுகிறோம் என ஷாப்ஸ் ட்விட் செய்துள்ளார்.
ஆகஸ்ட் 2 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அம்பர் நாட்டிலிருந்து பிரித்தானியா வர முடியும், அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை.
FDA அல்லது EMA-வால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
பயணிகள் புறப்படுவதற்கு முன் சோதனை செய்ய வேண்டும் மற்றும் பிரித்தானியா திரும்பிய இரண்டாம் நாளில் பி.சி.ஆர் சோதனை எடுக்க வேண்டும் என ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
Source: https://news.lankasri.com/article/2-jabbed-us-eu-travellers-allowed-free-travel-uk-1627480864