
இங்கிலாந்தில் இளைஞர் ஒருவரை கொலை செய்தமை மற்றும் அவரது நண்பர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 6 பாக்கிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பேட்லி என்ற பகுதியில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது.
உயிரிழந்த 20 வயது இளைஞர் மற்றும் அவரது இரு நண்பர்கள் சந்திப்பொன்றில் இருக்கையில் இரு தரப்பு மோதல் இடம்பெற்றுள்ளது. இதன் போது கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Source: https://canadamirror.com/article/murder-of-a-young-man-in-england-1627907296