
பிரித்தானியாவில் 31 வயது பெண்ணை உயிருடன் கொளுத்தி கொலை செய்த 3 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் கிரேட்டர் மான்செஸ்டரில், Bury பகுதியில் கிழக்கு தெருவில், வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பொலிஸார் பார்த்தனர். அங்கு உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அனால், மருத்துவர்கள் போராடிய பிறகும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது ஒரு கொலை சம்பவம் என தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக 34, 26 மற்றும் 24 வயதுடைய மூன்று இளைஞர்ளை பொலிஸார் கைது செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக வேறு யாருக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை என கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் கூறியுள்ளனர்.
Source: https://news.lankasri.com/article/bury-woman-dies-severe-burns-murder-investigation-1627194269