
ஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு, பாஸ்போர்ட் தொடர்பில் புதிதாக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது, வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்.
வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், பயணம் புறப்படுவதற்கு முன், தங்கள் பாஸ்போர்ட்கள் சமீபத்தைய விதிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அந்த அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் முதலான நாடுகளுக்கு செல்லும் பயணிகள், தங்கள் பாஸ்போர்ட்டில் போதுமான பக்கங்கள் உள்ளதா என்பதை பார்த்து, இல்லையென்றால் புதுப்பித்துக்கொள்ளுமாறும் அந்த அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தங்கள் பாஸ்போர்ட் செல்லத்தக்க வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் பிரித்தானியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாஸ்போர்ட்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டவையாக இருத்தல் நலம் என்கிறது வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம். பிரித்தானியர்கள், பயணம் தொடர்பான விவரங்களை GOV.UK என்ற இணையதளத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.
Source: https://news.lankasri.com/article/foreign-office-warns-brits-passport-1627536975