
தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டன் ரயில் நிலையம் அருகே 20 வயது இளைஞர் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிக்ஸ்டன் நிலத்தடி குழாய் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் நேற்று (புதன்கிழமை) இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞரைப் பார்த்த சிலர், பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
சில நிமிடங்களில் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இரண்டும் வந்து முயற்சித்த போதிலும், அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவர் யார் என்பது இன்னும் முறையான அடையாளம் காணப்படவில்லை, பிரதே பரிசோதனை ஏற்பாடு செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரிக்ஸ்டனில் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு குற்றவியல் கட்டளையின் துப்பறியும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.lankasri.com/article/uk-crime-brixton-tube-station-stabbing-death-1626934179