
இளவரசர் சார்லஸ் டயானாவின் திருமணம் கூட அவ்வளவு காலம் நீடிக்கவில்லை. ஆனால், அவரது திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் இதுவரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
அது, சார்லஸ் டயானா திருமணத்தின்போது விநியோகிக்கப்பட்ட ஒரு கேக்… 1981ஆம் ஆண்டு, சார்லஸ் டயானா திருமணத்தின்போது பிரித்தானிய மகாராணியாரின் ஊழியர்களில் ஒருவரான Moyra Smith என்பவருக்கு இந்த கேக் துண்டு வழங்கப்பட்டுள்ளது.
8க்கு 7 இஞ்ச் நீளமும், 28 அவுன்ஸ் எடையும் உடைய அந்த கேக் துண்டு, பிளாஸ்டிக் பேப்பர் ஒன்றில் பாதுகாப்பாக சுற்றப்பட்டு பழைய கேக் டின் ஒன்றில் 40 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
2008 வரை அந்த கேக்கை Moyraவின் குடும்பம் பாதுகாத்து வைத்திருந்த நிலையில், பின்னர் பழங்கால பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் அதை வாங்கியிருக்கிறார்.
இப்போது அந்த கேக் ஏலத்துக்கு வருகிறது. ராஜ குடும்பத்தால் வழங்கப்பட்ட கேக் இது என்று கூறியுள்ள ஏலம் விடும் நிறுவனம், கூடவே, இதை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
Source: https://news.lankasri.com/article/slice-charles-dianas-wedding-cake-goes-sale-1627468757