
காபூல்: ஆப்கனில் கடந்த 24 மணி நேரத்தில் 262 தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அறிவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான் பயங்கரவாதிகள் கடுமையாக தாக்கி, பல நகரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்கள் கொண்டு வந்தனர். இதனால், ஆப்கன் ராணுவம் – தலிபான் பயங்கரவாதிகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
லக்மன், நங்கர்ஹர், நூரிஸ்தான், குனார், கஜ்னி, பக்டியா, காந்தகார், ஹெரட், பலக், ஜோவ்ஜன் ஹெல்மண்ட், குண்டூஸ் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நவடிக்கையில் 262 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 176 பேர் படுகாயமடைந்தனர். 21 ஐஇடி வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே, தலிபான்களை ஊடுருவலை தடுக்கும் வகையில் காபூலை தவிர்த்து மற்ற மாகாணங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
SOurce: https://www.dinamalar.com/news_detail.asp?id=2809361