
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விண்வெளி பைலட் வீராங்கனை பயிற்சிக்காக அனுமதி கிடைத்துள்ள நிலையில், அவர் உதவியை நாடியுள்ளார்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயா கீர்த்திகா. இவர் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக அவர் கனடாவில் இருக்கும் விண்வெளி வீராங்கனை பயிற்சிக்காக, அங்கிருக்கும் பயிற்சி மையத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரின் விண்ணப்பத்திற்கு கனடாவில் அனுமதி கிடைத்துள்ளது.
ஆனால் அதற்கு பல லட்சம் ரூபாய் தேவைப்படுவதால், அரசின் உதவியை இவர் கோரியுள்ளார்.
குறிப்பாக இந்த பயிற்சிக்கு 50 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால், தமிழக அரசு இதற்காக உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Source: https://news.lankasri.com/article/tamil-women-move-to-canada-for-our-dream-pilot-1627866727