
கனடாவில் முதல் மாகாணமாக கியூபெக் மாகாணம் தடுப்பூசி பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்ய உள்ளது.
கனடாவில், கொரோனாவின் நான்காவது அலையை எதிர்கொள்ளும் வகையிலும், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக கியூபெக் நேற்று அறிவித்தது.
இந்த தடுப்பூசி திட்டத்தின் நோக்கம், இரண்டு டோஸ் தடுப்பூசியும் பெறுவதற்காக முயற்சி எடுத்தவர்கள், பாதி அளவுக்காவது சகஜ வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும் என்பதாகும் என்று கூறியுள்ளார், மாகாண பிரதமரான Francois Legault.
இந்த திட்டம் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதிதான் நடைமுறைக்கு வர உள்ளது. ஆகவே, தங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அதற்கு முன் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த தடுப்பூசி பாஸ்போர்ட், பொது மற்றும் அத்தியாவசிய சேவைகளை அணுக பயன்படாது என்றும், உடற்பயிற்சிக்கூடம், இசை நிகழ்ச்சிகள், மதுபான விடுதிகள், விளையாட்டுத் திடல்கள் போன்ற இடக்களுக்கு செல்வதற்கு மட்டுமே பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://canadamirror.com/article/canadas-quebec-to-introduce-vaccine-passport-1628233849