
புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டிலிருந்து 3,13,38,088 பேர் நலம் பெற்றனர்.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில்,38,667 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,21,56,493 ஆக அதிகரித்தது. மேலும் 34,743 பேர் நலமடைந்ததை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,13,38,088 ஆனது.
தற்போது, 3,87,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 478 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,30,732 ஆனது.

தற்போது வரை 53.61 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2823173