
சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில் உள்ள ஒரு நடை பாலத்தின் கீழ், கொட்டும் மழையில் துணையைத் தேடி வந்த பெண் யானையை பார்க்க, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் துணையை தேடி பெண் யானைகள் இந்த பகுதிக்கு வருவது வழக்கம். இப்போது வந்துள்ள யானை, கொட்டும் மழையில் நனைந்தவாறு, பாலத்திற்கு அடியில் ஓடும் ஆறு அருகே உணவு சாப்பிடுவது மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
சென்ற ஆண்டு, இதே பகுதியை சேர்ந்த,15 யானைகள் கொண்ட கூட்டம், சுமார் 500 கிலோ மீட்டர் பயணம் செய்து, வழி நெடுகிலும் செய்த சேட்டைகள் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Source: https://canadamirror.com/article/heavy-rain-elephant-search-for-there-pair-1626797166