
பாரிய பல்தேசிய நிறுவனங்கள் எந்த நாட்டில் வருமானத்தை ஈட்டியோ அந்த நாட்டுக்கு குறைந்த பட்சம் 15 வீத வரியை செலுத்த வேண்டுமென்ற யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
சர்வதேச வரிக் கொள்கைகளை அமுல்படுத்தும் போது சிறிய நாடுகளை உதாசீனம் செய்யக் கூடாது என சுவிட்சர்லாந்து அரசாங்கம் கோரியுள்ளது.
புத்தாக்கத் திறனுடைய சிறிய நாடுகளுக்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் கார்பிரேட் வரிக் கொள்கைகளை அமுல்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் நிதி அமைச்சர் Ueli Maurer இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தாலியில் நடைபெறும் ஜீ20 கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிதி அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முக்கிய நாடுகளது நிதி அமைச்சர்கள் மத்திய வங்கி ஆளுனர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
ஜீ20 நாடுகளில் சுவிட்சர்லாந்து அங்கம் வகிக்காத போதிலும் விருந்தினர் என்ற அடிப்படையில் சுவிஸ் நிதி அமைச்சர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
பாரிய பல்தேசிய நிறுவனங்கள் எந்த நாட்டில் வருமானத்தை ஈட்டியோ அந்த நாட்டுக்கு குறைந்த பட்சம் 15 வீத வரியை செலுத்த வேண்டுமென்ற யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவினை ஏற்றுக்கொள்வதாக சுவிட்சர்லாந்து ஏற்கனவே அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியான வரிக் கொள்கையொன்று அமுல்படுத்தப்படுவது சிறந்த்து என்ற போதிலும் சிறிய நாடுகளை பாதிக்காத வகையில் இந்தக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் Ueli Maurer தெரிவித்துள்ளார்.