ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய தாலிபான்கள், தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, பல நாடுகளின் தூதரகங்கள் காபூலில் அமைந்துள்ளதால், அவை தங்கள் தூதரக அலுவலர்களை வேகமாக காபூலிலிருந்து வெளியேற்றி வருகின்றன.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஆப்கானிஸ்தானில் அதன் தூதரகம் இல்லை. ஆனால், அதன் வெளியுறவு அமைச்சக சர்வதேச மேம்பாட்டு அலுவலக கிளை ஒன்று காபூலில் உள்ளது. அதில் சுவிஸ் நாட்டவர்கள் மூன்று பேர் மட்டுமே பணியாற்றிவருகிறார்கள். அவர்கள் மூவரையும் சுவிட்சர்லாந்து காபூலிலிருந்து மீட்டு சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவந்துவிட்டது.
இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், காபூலிலிருந்து தங்கள் தூதரக அலுவலர்களை மீட்கும் நாடுகள் அனைத்துமே, கூடவே சில ஆப்கன் குடிமக்களையும் மீட்கின்றன. அவர்கள், இந்த தூதரக அலுவலர்களுக்கு, அல்லது அவர்கள் சார்ந்த நாடுகளுக்கு உள்ளூர் மட்டத்தில் பெரிதும் உதவியாக இருந்தவர்கள் ஆவர்.
அந்த வகையில், சுவிட்சர்லாந்தும் சக பணியாளர்களாக தங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்த ஆப்கன் குடிமக்கள் 40 பேர், மற்றும் அவர்களது குடும்பத்தினரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis தெரிவித்துள்ளார்.
Source: https://news.lankasri.com/article/swiss-nationals-evacuated-from-afghanistan-1629179126