
ஜேர்மனியில் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்ற அழகி ஒருவர், அதிவேகத்தில் காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானார்.
ஜேர்மனியில், ‘Berlin: Day and Night’ என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் Julia Jasmin Ruehle (33).
நேற்று நெடுஞ்சாலை ஒன்றில் காரில் அதிவேகமாக பயணித்துள்ளார் அவர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழக்க, நெடுஞ்சாலையில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது அது பயங்கரமாக மோதியுள்ளது.
அந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியதில், Juliaவின் கார் பல முறை சாலையில் பல்டி அடித்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் Julia படுகாயமடைந்த நிலையிலும், காரிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
Julia was rushed to hospital with serious injuries, but doctors say her life is not in danger.
இந்த சமூக ஊடக அழகிகள், தங்கள் அழகை மூலதனமாக வைத்து வாழ்ந்து வரும் நிலையில், சமீபத்தில்தான் பிரித்தானியாவைச் சேர்ந்த Finley Taylor (27) என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி தனது அழகை இழந்ததால் இனி எப்போது மீண்டும் வருவாய் ஈட்டுவது என்பது தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்.
அதேபோல், விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள Juliaவாலும், இனி எப்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலும் என்பது தெரியவில்லை.

Source: https://news.lankasri.com/article/star-german-reality-tv-seriously-injured-1625815105