
ஜேர்மனியில், பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரித்தானியரை ஜேர்மன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் பெர்லினில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் உள்ளூர் ஊழியராக பணிபுரிந்த பிரித்தானியரை பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
52 வயதாகும் அந்த சந்தேக நபர் டேவிட் எஸ் (David S) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜேர்மன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 4-ஆம் திகதி பிடிவாரண்ட் வழங்கப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை அன்று Brandenburg மாநிலத்தில் உள்ள Potsdam நகரத்தில் டேவிட் கைது செய்யபட்டுள்ளார்.
அவரது குடியிருப்பு மற்றும் பணியிடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, இன்று (புதன்கிழமை) விசாரணை நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
David “on at least one occasion handed over documents obtained during his professional activities to a representative of the Russian intelligence service,” the German Federal Attorney’s Office said in a statement.
சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பலரை ஜேர்மனி கைது செய்துள்ளது. ஆனால் நேட்டோ (NATO) கூட்டாளியின் குடிமகனை பிடிப்பது மிகவும் அரிது.
இது குறித்து பேசிய ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹெயிகோ மாஸ் (Heiko Maas), “நெருங்கிய கூட்டணி கூட்டாளியின் உளவுத்துறையின் தேர்வு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்பதால் பெர்லின் இந்த வழக்கை “அசாதாரணமாக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது” என்றார்.
Source: https://news.lankasri.com/article/briton-arrested-in-germany-spying-for-russia-uk-1628703747