
மெல்போர்ன்: கோவிட் வைரஸ் 2வது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கியுள்ளது. டெல்டா வகை கோவிட் வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் 2வது மிகப்பெரிய நகரமான, 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்னில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தும் அங்கு டெல்டா கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 92 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கோவிட் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்தது. ஊரடங்கை திரும்பப் பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து டெல்டா வகை கோவிட் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது’ என்றார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833638