
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் இறுதி போட்டிக்கு கமல்பிரீத் கவுர் தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ,
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 9வது நாளான இன்று நடந்த மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.