
கொரோனாவின் மூன்றாவது அலை கொடூரமாக தாக்கி வருவதால் ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு நாடுகளில் கொரோனா 3வது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதனால் மூன்றாவது அலையில் இருந்து தங்களின் நாடுகளை பாதுகாத்துக்கொள்ள முன் எச்சரிக்கையாக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சில நகரங்களில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் போன்ற இடங்களில் ஊரடங்கு முடிவுக்கு வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சரான பீட்டர் டட்டனுடைய மகன் பயிலும் பள்ளியில் ஒரு சிலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை வீட்டிலே தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Source: https://news.lankasri.com/article/australia-announces-lockdown-again-1627976586